எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையில் ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்ற புதிய தேசிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக கடந்த 2001ம் ஆண்டு கே.சந்திரசேகர ராவால் தோற்றுவிக்கப்பட்டது தெலங்கானா ராஷ்டிர சமிதி. ஐதராபாத்தில் நடைபெற்ற தொடர் போராட்டங்களை அடுத்து கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலமாக உருவாகியது.
இதையடுத்து, 2014-ல் தெலங்கானாவின் முதல் முதல்வராக பதவி ஏற்ற சந்திரசேகர ராவ், 2018-ல் மீண்டும் முதல்வராக தேர்வானார். தெலங்கானா சட்டப்பேரவைக்கான அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
மத்திய ஆளும் கட்சியான பாஜகவை கடுமையாக எதிர்த்த வரும் சந்திரசேகர ராவ், 2014 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்காக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பாஜகவுக்கு மாற்றாக தேசிய கட்சி ஒன்றை தோற்றுவிக்க இருப்பதாகக் கூறி வந்த சந்திரசேகர ராவ், விஜயதசமி நாளான நேற்று இதற்காக தனது கட்சியின் பொதுக்குழுவை தலைநகர் ஐதராபாத்தில் கூட்டினார். இந்தக் கூட்டத்திற்கு வருகை தருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் பெயரான தெலங்கானா ராஷ்டிர சமிதியை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றுவதற்கான தீர்மானத்தை கே.சந்திரசேகர ராவ் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, கட்சியின் பெயர் இனி பாரத் ராஷ்டிர சமிதி என அழைக்கப்படும் என்றும், இது தேசிய அரசியலில் முக்கிய பங்காற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, மத ரீதியாக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் காணும் பாஜகவுக்கு மாற்றாக பாரத் ராஷ்டிர சமிதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, நல்லாட்சிக்கான மாடலாக தெலங்கானா மாநில ஆட்சி இருக்கிறது என்பதை தேசிய அளவில் பிரசாரம் செய்ய பாரத் ராஷ்டிர சமிதி முடிவெடுத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



