முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று இந்தியாவின் 4-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை உனாவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

புதன்கிழமை, 12 அக்டோபர் 2022      இந்தியா
Modi 2022-10-12

Source: provided

புதுடெல்லி : ஹிமாச்சல பிரதேசத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இங்குள்ள உனா மாவட்டத்தில் நான்காவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த ரெயில் டெல்லியில் இருந்து உனாவில் உள்ள அம்ப் ஆண்டவுரா ரெயில் நிலையத்திற்குச் செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரெயில் அம்பாலா, சண்டிகர், ஆனந்த்பூர் சாஹிப் மற்றும் உனா ஆகிய நிறுத்தங்களில் நிற்கும் என்றும் புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் ரெயில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸை மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் காந்தி நகரில் இருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து