எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச்.6 - தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை ராஜசுலோசனா நேற்று சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. கடந்த சில நாட்களாக சிறுநீnullரகம் மற்றும் இதய கோளாரால் கோளாறால் அவதிப்பட்ட ராஜசுலோசனா, சில நாட்களுக்கு முன்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் தராததால் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் அவர் காலமானார்.
சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெருமைமிக்க நடிகர்களான மறைந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், தெலுங்கில் என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், கன்னடத்தில் ராஜ்குமார் என பலருடன் நடித்தவர் ராஜசுலோசனா.
1935-ம் ஆண்டு, அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்த விஜயவாடாவில் பிறந்தவர். ஆனால் வளர்ந்தது சென்னை. அவரது இயற்பெயர் ராஜீவலோசனா அதைத்தான் பின்னர் சினிமாவுக்காக ராஜசுலோசனா என மாற்றிக் கொண்டார்.
1953ல் அவர் நடித்த முதல் படம் குணசுந்தரி வெளியானது. தொடர்ந்து சத்யஜோதி ரங்கோன் ராதா, அம்பிகாபதி, சாரங்கதாரா தாய் மகளுக்குக் கட்டிய தாலி, கவலை இல்லாத மனிதன், அரசிளங்குமரி, நல்லவன் வாழ்வான், குலேபகாவலி படித்தால் மட்டும் போதுமா, தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற படங்கள் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.
குறிப்பாக கைதி கண்ணாயிரம் படத்தில் ராஜசுலோசனா பாடிய கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும் வஞ்சகரின் உள்ளம் வலை விரிக்கும்... பாடலும், எம்.ஜி.ஆர். ஜோடியாக நல்லவன் வாழ்வான் படத்தில் பாடிய குற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா... என்ற பாடலும் அந்த காலத்தில் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.
எழுபதுகளில் அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எம்ஜிஆரின் இதயக்கனியில் அவரது வில்லி வேடம் பெரிதும் பேசப்பட்டது இப்படி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 350 படங்கள் வரை நடித்தவர் ராஜ சுலோசனா, சென்னை மடிப்பாக்கத்தில் சதாசிவ நகரில் வசித்து வந்தார்.
புஷ்பாஞ்சலி நிருத்ய கலா கேந்திரம் என்ற பெயரில் நடனப் பள்ளி ஒன்றை நடத்தி அதன் மூலம் நடனம் கற்றுக்கொடுத்தார். பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் சி.எஸ்.ராவ். இவர்களுக்கு தேவி, ஸ்ரீ என்ற மகள்கள் உள்ளனர். ஷாம்சுந்தர் என்ற மகனும் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருக்கிறார். ராஜசுலோசனா மரணம் அடைந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூத்த நடிகையான ராஜசுலோசனா மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
குறிப்பாக நடிகைகள் கே.ஆர்.விஜயா, சி.ஐ.டி.சகுந்தலா, வியட்நாம் வீடு சுந்தரம், என பலர் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் ஒரு மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள மின்சார மயானத்தில் ராஜசுலோசனா உடல் தகனம் செய்யப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியா எண்ணெய் வாங்குகிறதா? ரஷ்யா தரப்பில் விளக்கம்
19 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
அசாம், காமாக்யா கோவிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
19 Feb 2026டெல்லி, காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி காமாக்யா கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
சீனாவில் பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து - 12 பேர் பலி
19 Feb 2026பெய்ஜிங், சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோக நிகழ்வாக பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
-
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
19 Feb 2026சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம்.
-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
19 Feb 2026சென்னை, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
-
மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்திற்குள் தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
19 Feb 2026சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் உறுதி
19 Feb 2026சென்னை, வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணநை்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தே.மு.தி.க.
-
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை
19 Feb 2026சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் சகோதரர் ஆண்ட்ரூ கைது
19 Feb 2026லண்டன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
'தி கேரளா ஸ்டோரி - 2' திரைப்படத்தை தடை செய்ய கேரள முதல்வர் வலியுறுத்தல்
19 Feb 2026திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரிக்கு எதிராக தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
-
உலகின் பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
19 Feb 2026சென்னை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அரசு செய்த சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்வதா? தி.மு.க அரசுக்கு மீது இ.பி.எஸ் கேள்வி
19 Feb 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு?


