முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறப்பணிகள் மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக்கூடாது: பரிசு பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது ஆபத்து : பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : மதம் தொடர்பான அறப்பணிகள் மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது என்றும் பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், மதமாற்றம் தொடர்பாக மாநிலங்களிடம் இருந்து விரிவான தகவல்களை பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பொதுநல வழக்கு... 

மத மாற்றத்திற்கு எதிராக பா.ஜ.க. தலைவர் அஷ்வினி குமார் உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யப்படும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மதமாற்றம் தொடர்பாக ஏற்படும் தீங்குகள் அதன் தொடர் விளைவுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டது. மோசடியான மதமாற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அறிக்கை தயார் செய்தும் மற்றும் சட்டமசோதாவை உருவாக்கவும் மத்திய சட்ட ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

மீண்டும் விசாரணை...

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எதிர்மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், முக்கிய கருத்துக்களை தெரிவித்தனர்.

பிரமாண பத்திரம்...

குறிப்பாக மத அறப்பணிகள் என்பது மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் அளித்து செய்யும் மதமாற்றம் மிகவும் ஆபத்தானது, அரசியல் சாகனத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் மதமாற்ற ஒழிப்பு சட்டங்கள் பற்றி மாநில அரசுகளிடம் இருந்து விரிவான தகவல்களை சேகரித்து அதுபற்றி பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

பல மாநிலங்களில்...

ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்ம் உறுதி செய்ததை குறிப்பிட்டிருந்தது. ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கர்நாடகம், அரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதையும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்த நிலையில், இந்த வழக்கில் நேற்று மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு (வரும் திங்கட்கிழமை) தள்ளி வைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து