எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
போட்செப்ஸ்ட்ரூம் : முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 3 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
தென் ஆப்பிரிக்காவில்...
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.
101 ரன்னில் சுருண்டது...
'டாஸ்' ஜெயித்த இந்திய அணியின் கேப்டன் ஷபாலி வர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 107 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஜார்ஜியா பிலிமெர் 35 ரன்னும், இசபெல்லா 26 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் பார்ஷவி சோப்ரா 3 விக்கெட்டும், திதாஸ் சாது, மன்னட் காஷ்யப், ஷபாலி வர்மா, அர்ச்சனா தேவி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்தியா வெற்றி...
தொடர்ந்து ஆடிய இந்தியா 14.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 10 ரன்னிலும், அடுத்து வந்த சவுமியா திவாரி 22 ரன்னிலும் அன்னா பிரோவ்னிங் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். தொடக்க வீராங்கனை சுவேதா செராவத் 61 ரன்னுடனும் (45 பந்து, 10 பவுண்டரி), திரிஷா 6 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். 3 விக்கெட்டுகள் வீழ்த்திய பார்ஷவி சோப்ரா ஆட்டநாயகி விருது பெற்றார்.
இங்கி., பேட்டிங்...
மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் சந்தித்தன. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் 99 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 25 ரன்னும், கேப்டன் கிரேஸ் 20 ரன்னும், ஜோசி குரோவ்ஸ் 15 ரன்னும், செரேன் ஸ்மேல் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.
இங்கி., வெற்றி...
பின்னர் ஆடிய ஆஸ்திரேலியாவால் இந்த எளிய இலக்கை கூட எடுக்க முடியவில்லை. அந்த அணி 18.4 ஓவர்களில் 96 ரன்னில் அடங்கியது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஹன்னா பாகேர் 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகியாக ஜொலித்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
வார ராசிபலன்
14 Feb 2026


