முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும் : ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சனிக்கிழமை, 18 மார்ச் 2023      தமிழகம்
OPS 2023 03 18

Source: provided

சென்னை : ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம் என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

அ.தி.மு.க.வில்  பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த வாரம் (26-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

அ.தி.மு.க.வை பற்றி எதுவும் தெரியாத கூட்டம் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அ.தி.மு.க. தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பிக்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது. 

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டிலை பார்த்தால் அலர்ஜியாக உள்ளது. எடப்பாடி அணி மீது அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பிக்கை வைத்திருந்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

ஈரோடு இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னத்தை விட்டுக் கொடுத்தோம். ஈரோடு இடைத்தேர்தல் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது. எங்களது பயணம் மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அணியிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதே எங்களது நோக்கம். 

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்சியை இப்படி தான் நடத்தினார்களா?. சர்வாதிகாரமாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். தமிழகத்தில் எங்கு சென்றாலும் எடப்பாடிக்கு எதிர்ப்பலை பாயும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசரம். 

எங்களை கட்சியை விட்டு நீக்கும் தகுதி யாருக்கும் இல்லை. ஏப்ரல் 2-வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து