எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நாட்டில் தினசரி பாதிப்பு 3,094 ஆக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவதால் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3,094 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிப்பு நேற்று முன்தினம் 3 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அதாவது நேற்று முன்தினம் 3,016 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 694, கேரளாவில் 654, குஜராத்தில் 381, டெல்லியில் 295, கர்நாடகாவில் 288, தமிழ்நாட்டில் 123, அரியானாவில் 115, இமாச்சலபிரதேசத்தில் 124, கோவாவில் 108 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 15 ஆயிரத்து 786 ஆக உயர்ந்தது. தொற்றின் பிடியில் இருந்து நேற்று முன்தினம் 1,390 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 69 ஆயிரத்து 711 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 1,699 அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 15,208 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 3,852 பேர், மகாராஷ்டிராவில் 3,016 பேர், குஜராத்தில் 2,247 பேர், கர்நாடகாவில் 1,037 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தொற்று பாதிப்பால் நேற்று முன்தினம் குஜராத், கோவாவில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட இறப்புகளில் 3-ஐ கணக்கில் கொண்டு வந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 867 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் நாடு நாடு முழுவதும் 1,18.694 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


