எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மணப்பாறை. ஏப்.27 - மணப்பாறை அருகே தாயும் மகளும் ஒரே சேலையில் தூக்கிலிட்டு தற்ெகொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கம்(45). விதவையான இவரது மகள் ரம்யா(23). இதே ஊரை சேர்ந்தவர் மணி(எ) மூர்த்தி. மணி டெல்லியில் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இங்கே வந்துபோகும் சமயத்தில் மாணிக்கத்துக்கும், ரம்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் ஊரை விட்டு ஓடிவிட்டனர்.
ஊர் மக்கல் அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வந்து ஊரார் முன்னிலையில் திருமணமும் நடத்தி வைத்தனர். புதுமனைவியுடன் டெல்லிக்கு மணி சென்றார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து மணி தனது ஊரில் உள்ள மனைவியின் தாயாருக்கு போன் செய்துள்ளார். இங்கே உன் மகளை காணவில்லை. அங்கே ஏதும் வந்து இருக்கிறாரா? என்று மணி போன் செய்து கேட்டுள்ளார்.
அவர் போன் செய்தபோது ரம்யா அவர்களது ஊரில் இல்லையாம்.
இதற்கிடையில் கடந்த ஞாயிறன்று ரம்யா தாதம்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் மகளை தாய் தங்கம் கண்டித்துள்ளார். அப்போதுதான் ஏற்கெனவே விராலிமலையை சேர்ந்த ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அதனால் நான் மணியுடன் சேர்ந்து வாழமுடியாது என்று கூறி அழுதுபுழம்பி உள்ளார்.
இதனால் தாய், மகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மகளை தாய் தங்கம் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இருவரும் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார்கள். இதன் பின்னர் அவர்களை பக்கத்து வீட்டுக்காரர்கள் யாரும் பார்க்கவில்லையாம். சந்தேகப்பட்டு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தாய் மகள் இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்துள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
புத்தனாம்பட்டி எஸ்.ஐ. ஸ்ரீதேவி, வையம்பட்டி இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் மகள் ஒரேசேலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியா எண்ணெய் வாங்குகிறதா? ரஷ்யா தரப்பில் விளக்கம்
19 Feb 2026மாஸ்கோ, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தி.மு.க.வுடன் கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
19 Feb 2026சென்னை, தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு விடையாக தி.மு.க.வுடன் கூட்டணி என தெரிவிக்கிறோம்.
-
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.: தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பு
19 Feb 2026சென்னை, தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
-
மகாராஷ்டிராவில் முஸ்லிம் இடஒதுக்கீடு ரத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்திற்குள் தே.ஜ.கூ. வந்தால் அனைவரின் இடஒதுக்கீடும் காலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
19 Feb 2026சென்னை, தமிழ்நாட்டுக்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
-
சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தே.மு.தி.க.: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் உறுதி
19 Feb 2026சென்னை, வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணநை்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தே.மு.தி.க.
-
வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம்: வரும் 22-ம் தேதி 3 மாவட்டங்களில் மழை
19 Feb 2026சென்னை, தென்கிழக்கு வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ் சகோதரர் ஆண்ட்ரூ கைது
19 Feb 2026லண்டன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில், பிரிட்டன் அரசர் சார்ல்ஸின் சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
உலகின் பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்கிறது: ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்
19 Feb 2026சென்னை, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. அரசு செய்த சாதனை திட்டங்கள் மீது சவாரி செய்வதா? தி.மு.க அரசுக்கு மீது இ.பி.எஸ் கேள்வி
19 Feb 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு?


