முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய குழுவை அமைத்தது தமிழக அரசு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : சென்னை பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. 

கர்நாடக மத்திய பல்கலை. துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தீனபந்து, பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் ஜெகதீசன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

துணைவேந்தர் நியமனத்திற்கு கவர்னர் ஏற்கனவே தேடுதல் குழு அமைத்த நிலையில் தமிழக அரசும் குழு அமைத்துள்ளது. யு.ஜி.சி. பிரதிநிதியை நிராகரித்து தமிழக அரசு தனியாக தேர்வுக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. 

சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க,  கவர்னர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து