முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா போன்ற கொடிய தொற்று சீனாவில் மீண்டும் பரவும் அபாயம் : நிபுணர்கள் எச்சரிக்கை

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      உலகம்
Corona-virus 2023 08 19

Source: provided

பெய்ஜிங் : கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா தொற்று உருமாறி பொதுமக்களை பாடாய்படுத்தியது. இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக தற்போது தான் மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. 

இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில்  40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது. இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து