முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தில் மீட்ட குழந்தையை கொஞ்சியபடி நடந்து வரும் காவலரின் புகைப்படம் வைரல்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
chennai-rain-2023-12-07

சென்னை, மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ்காரர் ஒருவர் பத்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் காவலர்  ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்து வரும் காட்சி பதிவாகி இருக்கிறது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி நேற்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ்காரர் ஒருவர் பத்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் காவலர்  ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்து வரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து