முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை குறைவு

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      வர்த்தகம்
Gold 2024-04-06

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது.

தைவான் நாட்டுடனான மோதலுக்கு தயாராகி வரும் சீனா, சர்வதேச அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தங்கத்தின் விலை இந்தியாவில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. கடந்த அட்சய திருதியை நாளன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்திருந்தது.

நேற்று வர்த்தக நேரம் துவங்கியதில் இருந்து தங்கத்தின் விலை சரியத் துவங்கியது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 100 ரூபாய் குறைந்து 6,650 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 800 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 250 ரூபாயும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 2,000 ரூபாயும் விலை குறைந்துள்ளது.

வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு 50 பைசா குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 97 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி, நேற்று 96 ரூபாய் 50 பைசாவிற்கு விற்பனையானது. ஒரு கிலோ பார்வள்ளி 96 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து