முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை:குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜூன் 2024      விளையாட்டு
ram-51

Source: provided

வாஷிங்டன்: டி-20 உலகக் கோப்பை போட்டிகளில் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த அணிகள் குறித்து பார்ப்போம்.

அபார வெற்றி... 

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கயானாவில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய உகாண்டா அணி மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

39 ரன்களுக்கு... 

இதற்கு முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணி இலங்கைக்கு எதிராக 39 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே டி20 உலகக் கோப்பையில் ஒரு அணி மிகக் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததாக இருந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம் நெதர்லாந்தின் மோசமான சாதனையை உகாண்டா சமன் செய்துள்ளது.

குறைந்த ரன்களில்...

1) நெதர்லாந்து - 39 ரன்கள் - இலங்கைக்கு எதிராக, 2014.

2) உகாண்டா - 39 ரன்கள் - மே.இ. தீவுகளுக்கு எதிராக, 2024.

3) நெதர்லாந்து - 44 ரன்கள் - இலங்கைக்கு எதிராக, 2021.

4) மே.இ.தீவுகள் - 55 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக, 2021.

5) உகாண்டா - 58 ரன்கள் - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து