எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ம.பி.,யில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் நடத்திய சோதனையில், ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிவைத்து உஜ்ஜயினி போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் படி 2 வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட முயன்ற 9 பேரை கைது செய்தனர்.
இந்த சோதனையின் போது ரூ.14.60 கோடி ரொக்கம், 7 கிலோ வெள்ளி, 7 நாடுகளின் கரன்சிகள், 10 மொபைல் போன்கள், 7 மடிக்கணினிகள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி பியூஷ் சோப்ராவை போலீசார் தேடி வருகின்றனர்.
____________________________________________________________________
சூப்பர் 8 சுற்றில் ஆப்கான்
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டிரினிடாடில் நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பப்புவா நியூ கினியா அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 95 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கிப்ளின் டோரிகா 27 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பசல்ஹக் பரூக்கி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
____________________________________________________________________
வங்கதேச அணி வெற்றி
டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது. ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற 27வது லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்சேல் 18 ரன்களும், மேக்ஸ் ஓ டவுட் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங், 26 ரன்களும், எங்கல்பிரிட் 33 ரன்களும் எடுத்து ரன்களை சேர்த்தனர். தொடர்ந்து, ஒருசில ஓவர்களிலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி தடுமாறியது.இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களே மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி சூப்பா் 8 சுற்றை நெருங்கியிருக்கிறது.
____________________________________________________________________
சாதனை பட்டியலில் நவீன்
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் டிரினிடாடில் நடைபெற்ற 29வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. ஆப்கானிஸ்தான் அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பைதீன் நைப் 49 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த 2 விக்கெட்டுகள் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது விக்கெட் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிகெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நவீன் உல் ஹக் படைத்துள்ளார். இந்த பட்டியலில் ரஷித் கான் (144 விக்கெட்) முதல் இடத்திலும், முகமது நபி (95 விக்கெட்) 2ம் இடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் (59 விக்கெட்) 3வது இடத்திலும், நவீன் உல் ஹக் (50 விக்கெட்) 4ம் இடத்திலும் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


