எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வரும் செனாப் பாலம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது
ஜம்மு காஷ்மீரில் கத்ரா - பனிஹால் பிரிவில் உதம்பூர் -ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தில் செனாப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் உயரம் 359 மீட்டர் ஆகும். இந்த உயரம் பாரிஸ் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிகம் என்பது சிறப்பாகும்.
செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் வழியாக ரம்பானில் இருந்து ரியாசிக்கு ரயில் சேவை விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து கொங்கன் ரயில்வேயின் துணை தலைமை பொறியாளர் சுஜய் குமார் கூறுகையில்,
இந்த திட்டம் மிகவும் சவாலானது. இந்த திட்டத்தால் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்று கூறினார்.
ரியாசி துணை கமிஷனர் விஷேஷ் மகாஜன் கூறுகையில், இது நவீன உலகின் பொறியியல் அதிசயம். ரயில் ரியாசியை அடையும் நாள், மாவட்டத்தையே மாற்றும் நாளாக இருக்கும். இது பெருமைக்குரிய தருணம்.
எங்களுடைய பொறியாளர்கள் ஒரு அற்புதத்தை உருவாக்கியிருப்பது பெருமையான தருணம். இது உலகின் 8-வது அதிசயமாகும். இந்த பாலத்தை திறக்கும் சரியான தேதி சொல்ல முடியாது.ஆனால் அந்த நாள் விரைவில் வரும் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


