எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை, நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பெண் வீட்டார் அடித்து நொறுக்கிய சம்பவத்தில், தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து இந்த காதல் ஜோடிக்கு (ஜூன் 13) கட்சி அலுவலக வளாகத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் 10-க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அழைத்துச் செல்ல கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்பொழுது திருமணமான பெண் அவர்களுடன் செல்ல மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கட்சியின் அலுவலகம், கண்ணாடி, இருக்கைகள், கதவு என அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், வெள்ளாளர் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பந்தல் ராஜா என்பவர் தலைமையில் வந்து அலுவலகத்தை சூறையாடினர். பெண்கள் என்றும் பார்க்காமல் தாக்கியிருக்கிறார்கள். அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு வந்திருந்தனர். நெல்லை மாவட்டத்தை பொருத்தவரையில் தொடர்ந்து கொலை நடந்து கொண்டிருக்கிறது. சாதிய கொலைகள், ஆணவக் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையில் கொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டிருக்க கூடிய இரண்டு பேருக்கும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.பெண் வழக்கறிஞர் பழனி வீட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்த தாக்குதலில் ரூ.5 லட்சம் அளவிற்கு பொருட்கள் சேதம் ஆகியுள்ளது. பெற்றோரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. மாவட்ட நிர்வாக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை உடனடியாக களைந்து எடுக்க வேண்டும். விபின் என்ற காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.


