Idhayam Matrimony

புற்றுநோய் கண்டறிந்த பிறகு முதன் முறை பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேட் மிடில்டன்

சனிக்கிழமை, 15 ஜூன் 2024      உலகம்
Kate-Middleton

லண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன். வில்லியம்- கேட் மிடில்டன் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு கேட் மிடில்டனை பொது வெளியில் காண முடியவில்லை. இது தொடர்பாக கேள்வி எழுந்த நிலையில், கேட் மிடில்டன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியானது.

புற்றுநோய் குணமாக கேட் மிடில்டன் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வெளியுலகில் தோன்றாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்றுதான் பொது வெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்றார். மன்னர் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு லண்டனில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். இதன்மூலம் சுமார் ஆறு மாதத்திற்கு பிறகு பொது வெளியில் கேட் மிடில்டன் காணப்பட்டார்.

கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட அதேவேளையில் மன்னர் சார்லஸ்க்கும் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டதால், சிசிக்சை மேற்கொண்டு சில வாரங்களிலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.கேட் மிடில்டன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை மூலம் நல்ல முன்னேற்றம் அடைந்ததாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து