எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லாடெர்ஹில் : டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டதால் 5 புள்ளிகளுடன் அமெரிக்க அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
30வது லீக் ஆட்டம்...
9வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் நகரில் நடைபெற இருந்த 30வது லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் மோத இருந்தன. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும். மாறாக அமெரிக்கா தோற்றால் பாகிஸ்தானுக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு நீடித்திருக்கும்.
மழையால் தாமதம்...
ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த போட்டியில் மழை குறுக்கிட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடரும் என ரசிகர்கள் மைதானத்தில் காத்திருந்தனர். மழை நின்ற பின், மைதானத்தை தயார்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதேசமயம் சிறிது நேரத்தில் மீண்டும் மழை தொடர்ந்தது.
தலா ஒரு புள்ளிகள்...
இதன் காரணமாக ஆட்டம் ரத்துசெய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் அமெரிக்க அணி அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. மழையால் ஆட்டம் ரத்துசெய்யப்பட்டதால் பாகிஸ்தான் அணியின் அடுத்த சுற்று கனவு தகர்ந்தது. தற்போது 2 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான், எஞ்சியுள்ள ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கூட 4 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். அதனால் முதல் சுற்றோடு பாகிஸ்தான் வெளியேறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம


