எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கோவை : பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக இருக்கும் என்று கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக தி.மு.க. முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி சாதாரண வெற்றியல்ல, வரலாற்று வெற்றி. பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக இருக்கும். அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.க. மாற்றவிடாமல் நமது 40 எம்.பி.க்கள் அரணாக செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகள்தான் நமது கட்சியின் அச்சாணி. வாக்களித்த மக்களுக்கு எம்.பி.க்கள் உண்மையாக இருக்க வேண்டும். கூட்டணி தலைவர்களுடன் இருப்பது தேர்தல் உறவு அல்ல, கொள்கை உறவு.
பா.ஜ.க. 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது மோடியின் தோல்வி. தான் நினைத்ததையெல்லாம் இனி பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வால் நிறைவேற்ற முடியாது. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரால்தான் மோடி பிரதமராக முடிந்தது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறுவோம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக வேட்பாளர்தான் வெற்றிபெறப்போகிறார். தொடர் வெற்றி தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது. எங்களை நம்பி பொறுப்பு வழங்கிய மக்களின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


