எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : தேசிய தேர்வு முகமையை மேம்படுத்தவும், வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யவும் மத்திய கல்வி அமைச்சகம், 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு தனது பரிந்துரையை 2 மாதங்களுக்குள் மத்திய கல்வி அமைச்சகத்திடம் வழங்கவுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க "பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பான மசோதா கடந்த பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் படி நீட் தேர்வு உள்ளிட்டவைகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதோடு குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், புதிய சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேர்வுகளைக் கண்காணிக்க உயர்மட்டக் குழுவை அமைத்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் ராமமூர்த்தி, டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் இந்த குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளனர்.
வெளிப்படையான, சுமூகமான மற்றும் நியாயமான முறையில் தேர்வுகள் நடைபெறுவதை உறுதி செய்யவும், தேர்வு செயல்முறையில் சீர்திருத்தம், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடு ஆகியவற்றில் இந்த உயர்மட்ட குழு பரிந்துரை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான அறிக்கையை 2 மாதங்களுக்குள் இந்த குழு, மத்திய கல்வி அமைச்சகத்திடம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
வார ராசிபலன்
14 Feb 2026


