முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம்: மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : செல்லூர் கே.ராஜூ - ஆர்.பி.உதயகுமார் - ராஜன் செல்லப்பா பங்கேற்பு

திங்கட்கிழமை, 24 ஜூன் 2024      தமிழகம்
ADMK 2024-06-24

Source: provided

மதுரை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்பு செயளாலர் வி.வி ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றதில் பொதுமக்கள் பங்கேற்று கண்டனம் முழக்கமிட்டனர் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்ற கள்ளச்சாராயத்தில் 58 க்கு மேற்பட்டோர் பலியாகி, 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் எடப்பபாடியாரின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளசார சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்ட கழகத்தின் சார்பில் மதுரை பேச்சியம்மன் படித்துறை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக அமைப்புச் செயலாளர் வி. வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சிகள் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், கழக மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பா.நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், கே.தமிழரசன், மாணிக்கம், கருப்பையா மற்றும் வில்லாபுரம் ராஜா, ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், கணேஷ்பிரபு, எஸ்.டி.ஜெயபாலன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், திருப்பாலை ஜீவா, பெரியசெல்வம், வக்கீல் தி.கோபி, அய்யப்பன், பரவை ராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், ஏ.பார்த்திபன், ஜெ.மாணிக்கம், சக்திவிநாயகர்பாண்டின், சோலைராஜா, எம்.ஜி.ராமச்சந்திரன், சுகந்தி அசோக்,வக்கீல்தமிழ்செல்வன், ஆர்.பாஸ்கரன், தளபதிமாரியப்பன், கலைச்செல்வம், ஜோசப்தனிஸ்லாஸ், ஞானசேகரன், கே.வி.கே.கண்ணன், விளாங்குடி கே.ஆர்.சித்தன், எம்.எஸ்.செந்தில்குமார், பைக்காரா கருப்பசாமி, பைக்காரா முத்துவேல், ரவிராஜ், எம்.எஸ்.கே.மல்லன், அனுப்பானடி பாலகுமார், ராணிநல்லுச்சாமி, பழங்காநத்தம் ராஜாராம், வக்கீல் பாலமுருகன், சி.ஆர்.கதிரவன், முனிச்சாலை சரவணன், அரியூர் ராமகிருஷ்ணன், கார்னர் பாஸ்கர், எம்.ஏ.நாசர்,திடீர்நகர் பாலா,நாகேந்திரன், ஐயப்பன், கோவில் நெடுஞ்செழியின், ஏ.மாயத்தேவன், எஸ்.எம்.டி.ரவி, முத்துமாரிஜெயக்குமார், தங்கபாண்டி, சண்முகசுந்தரம், கராத்தே கார்த்திக், ராஜா சீனிவாசன், கே.கே.நகர் மணி, புதூர் நாகராஜ், பூக்கடை முருகன், பி.ஆர்.சி.திருமுருகன், ஏஜாஸ்உசேன், 

ராஜன் செல்லப்பா பேசியதாவது: கள்ளக்குறிச்சி சம்பவம் நடைபெற்ற போது எடப்பாடியார் முதலில் அஞ்சலி செலுத்திபிறகு தான்  மற்ற கட்சிகளும் அங்கு சென்றன. அது அது மட்டுமல்ல அங்கு மருந்து இல்லை என்று முதன் முதலில் எடப்பாடியார் கூறினார். 

இந்த சம்பவத்திற்கு ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடுமையான கண்டனத்தை வலியுறுத்தியும் ,இதற்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடியார் போராடி வருகிறார். ஏனென்றால் பல்வேறு மாநிலங்களில் இருந்து மெத்தனால் கடத்தி வரப்படுகிறது சிபிஜ தான் விசாரணை செய்ய முடியும்,

இன்றைக்கு முதலமைச்சர் சிபிசிஐடி விசாரணை நடத்தப்படும் என்று கூறுகிறார் ஏனென்றால் அவருக்கு காவல்துறை மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாது இந்த கள்ளச்சாராயம் அந்த பகுதியில் உள்ள திமுகவைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள், பகுதிசெயலாளர்கள் மீறி நடக்குமா அவர்களையும் கைது செய்ய வேண்டும் .இந்த போராட்டத்துக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது இருந்தாலும் எதைப்பற்றி நாங்கள் அஞ்ச மாட்டோம் ஸ்டாலின் ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் போயாது என பேசினார்.

ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: சட்டசபையில் நியாயம் கிடைக்கவில்லை ஏனென்றால் அங்கு பேச முடியவில்லை அதனால் தான் இன்றைக்கு வீதியில் மக்கள் சேர்ந்து போராடுகிறோம்.

ஏழை எளிய மக்கள் உயிரை பறிக்கும் வகையில் இந்த அரசு உள்ளது ,கள்ளச்சாராயத்தால் 58 பேர் தற்போது வரை பலியாகி உள்ளனர் நாங்கள் மேடை விட்டு இறங்கும் போது எத்தனை உயிர்கள் பலியாகுமோ என்று அச்சம் எங்களுக்கு உள்ளது.

நடைபெற்ற சம்பவத்திற்கு சிபிஐ  விசாரணை வேண்டுமென்று எடப்பாடியார் கூறுகிறார் ஆனால் அமைச்சர் ரகுபதி சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று கூறுகிறார். சிபிஐவிசாரணை நடைபெற்றால் தான் நேர்மையாக முடிவு கிடைக்கும். சட்டசபையில் 45 நாள் நடத்த வேண்டும் ஆனால் அவர்கள் 8 நாளாக சுருக்கி விட்டார்கள், நடைபெற்ற சம்பவத்திற்கு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப கூட அனுமதி தராமல் கல் மனம் கொண்ட அரசாக உள்ளது.

மக்கள் உயிர் பிரச்சினை காட்டிலும் வேறு எந்த பிரச்சனையை சட்டசபையில் கேள்வி எழுப்ப முடியும் பதில் சொல்ல தயாராகாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். பதில் சொன்னால் நாங்கள் அவரை ஏற்றுக் கொள்கிறோம்.

ஸ்டாலினை போல நாங்கள் ஏசி அறையில் இருந்து கொண்டு கோரிக்கையை கொடுக்கவில்லை நேரடியாக சென்று மக்களை பார்த்து அவர்கள் விட்ட கண்ணீரை தான் நாங்கள் கூறுகிறோம். முதல் நாள் சட்டமன்றம் நடைபெற்ற போது இரங்கல் தீர்மானம் நிறைவேற்றினார்கள் அந்த மரபை நாங்கள் மீறவில்லை.

ஆனால் மறுநாள் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது 58 பேர்கள் செத்த பிறகு இடமாற்றத்தை செய்கிறார மாவீரன் ஸ்டாலின், இவர் நடவடிக்கை எடுக்க 58 உயிர்கள் தேவைப்படுகிறது, களத்தில் சென்று இன்னும் மக்களை சந்திக்கவில்லை ஆறுதல் கூறவில்லை ஏனென்றால் அவரது மனம் குற்ற உணர்ச்சியாக உள்ளது.

இப்படிப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடைபெறவில்லை, ஏற்கனவே மரக்காணம் சம்பவத்தில் 23 பேர் பலியானார்கள் அதற்கு சிபிசிஐடி போன்ற விசாரணை நடைபெறுகிறது இன்னமும் அது நிலுவையில் தான் உள்ளது புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் காலங்களில் காவல்துறை சுதந்திரமாக இருந்தது, ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது, தற்போது காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக மாறிவிட்டது.

நீங்கள் சட்டமன்றத்தில் பேச வாய்ப்பை மறுத்தீர்கள் ஆனால் இன்றைக்கு 8 கோடி மக்களும் ஸ்டாலின் வீட்டுக்கு போக வேண்டும் எடப்பாடியார் கோட்டைக்கு வரவேண்டும் என்று உரிமை குரலை எழுப்பி வருகிறார்கள்.எடப்பாடியாருக்கு நீங்கள் எத்தனை தடை போட்டாலும் அந்த தடைகளை தகர்த்து எறிந்து களத்தில் போராட கழகத் தொண்டர்கள் காத்து உள்ளார்கள். எடப்பாடியார் மருந்து இல்லை என்று கூறியதற்கு அமைச்சர் கணக்கு காண்பித்தார் நாங்களமக்கள் உயிரைக் காக்க கணக்கு தான் வேண்டும் என்று கேட்கிறோம்.

விஷ முறிவு மருந்து உள்ளதா என்று கேட்டதற்கு இதுவரையும் பதில் இல்லை தமிழகத்தில் இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது ஏற்கனவே மரக்காணம் சம்பவம், நல்ல மாடுக்கு ஒரு சூடு என்பது போல இனியும் நீங்கள் ஆட்சியை தொடரக்கூடாது ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து