முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிட முடியாது கர்நாடக முதல்வர் திட்டவட்டம்

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2024      தமிழகம்
Cauvery 2023 08 02

Source: provided

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே. சிவகுமார், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு பேசிய சித்தராமையா, "காவிரி விவகாரம் தொடர்பாக வரும் ஜூலை 14 ஆம் தேதி கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளனர். காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகத்தின் வலியுறுத்தலை மீறி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழகத்துக்கு ஜூலை 12-ம் தேதியிலிருந்து ஜூலை 31-ம் தேதி வரை காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் விடுவிப்பதை கர்நாடக மாநிலம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) வியாழக்கிழமை பரிந்துரை செய்த நிலையில் கர்நாடக முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து