எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஹராரே : ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி-20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
தொடரை வென்றது...
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
பந்துவீச்சை தேர்வு...
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்துது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் அடிக்க ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
168 ரன்கள் இலக்கு...
இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்த ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன மதவேர டக் அவுட்டிலும், அவரை தொடர்ந்து பிரையன் பென்னட் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
சரிவிலிருந்து...
இதனையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன மருமணியுடன் டியான் மியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அணியை சரிவிலிருந்து காப்பாற்ற போராடியது. இருப்பினும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. மருமணி 27 ரன்களிலும், டியான் மியர்ஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதோடு ஜிம்பாப்வே அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது. பிறகு களமிறங்கிய வீரர்களில் பராஸ் அக்ரம் அதிரடியாக விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவர் 13 பந்துகளில் 27 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
4-1 என்ற கணக்கில்...
18.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே 125 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்தியா ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக டியான் மியர்ஸ் 34 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளும் , துபே 2 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


