Idhayam Matrimony

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழ்நாடு மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      தமிழகம்
Fisher-Boat

சென்னை, எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலர் நேற்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை சிறைபிடித்தது. அத்துடன் அவர்களின் 3 விசைபடகுகளையும் பறிமுதல் செய்தது. 3 விசைப்படகு, 14 மீனவர்களை கைது செய்து பின்னர் விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.  தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும் கைது செய்வதும் தொடர்ந்து நிகழும் வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் கைது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து