முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினா சம்பவத்தை மறைக்க, ரெயில் விபத்தில் தி.மு.க. நாடகம் : மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2024      தமிழகம்
Murugan 2023 04 02

Source: provided

மதுரை : மெரினாவில் நடந்த உயிரிழப்புகளை மறைக்க ரெயில் விபத்தில் தி.மு.க. நாடகமாடுகிறது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். 

மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட   மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியின் போது குடி தண்ணீர் இல்லாமலும், ஆம்புலன்ஸ் இல்லாமலும் 5 பேர் உயிரிழந்தனர். ஆனால் அதை பற்றி தி.மு.க. அரசு வாய் திறக்கவே இல்லை. 

ரெயில்வே துறை பா.ஜ.க. ஆட்சியில் தான் வளர்ந்துள்ளது. பேப்பரில் மட்டும் படித்து கொண்டிருந்த புல்லட் ரயில், இன்னும் ஒரு வருடத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

மெரினாவில் நடந்த உயிரிழப்புகளை மறைக்க ரெயில் விபத்தில் தி.மு.க. நாடகமாடுகிறது. ரெயில் விபத்தில் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., கூட்டணி கட்சிகள் அவதூறு பரப்புகின்றன. 

ரெயில்வே வேலை செய்யவில்லை என்று இண்டியா கூட்டணி தோற்றத்தை உருவாக்குகிறது. தி.மு.க., ஆட்சி முழுக்க, முழுக்க வேதனையான ஆட்சி. தமிழர் ஒவ்வொருவரும் வேதனைப்படும் ஆட்சியாக இருந்து கொண்டு இருக்கிறது. 

போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நகரங்களில் உள்ள பழைய பேருந்துகளை மாற்றி விட்டு இ-வாகனங்களை கொண்டு வர மத்திய அரசாங்கம் பலமுறை சொல்லி விட்டனர். அதற்கான முழு செலவையும் மத்திய அரசு அளிக்கிறது.

ஆனால், அதை கூட தி.மு.க.வினர் நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. அண்ணாமலை வெளிநாட்டில் படிப்பில் இருந்தாலும் கூட தமிழக அரசியலில், குறிப்பாக பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை செயல்பாடுகளை தினந்தோறும் கவனித்து வருகிறார். 

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக் கூறாத விஜய், ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்னதை வரவேற்கிறேன். விஜயின் கொள்கை என்னவென்று இதுவரை தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து