முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர் இந்தியா மற்றும் இரண்டு இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      இந்தியா
Air-India

Source: provided

புதுடெல்லி; ஏர் இந்தியா விமானத்தை அடுத்து இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து நியூயார்க் நகருக்கான ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள டெல்லி விமான நிலைய டிசிபி (ஐஜிஐ), “விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் உள்ள பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.” என்று தெரிவித்தார்.

இதனிடையே, மும்பையில் இருந்து மஸ்கட் மற்றும் மும்பையில் இருந்து ஜெட்டா செல்ல வேண்டிய 2 இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அந்த விமானங்களில் இருந்த பயணிகள், பணியாளர்கள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்கான பல்வேறு குழுக்கள், வெடிகுண்டுகள் உள்ளனவா என்பதை கண்டறியும் நோக்கில் விமானங்களை முழுமையாக பரிசோதித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து