முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை காக்கும் திராவிட மாடல் அரசு முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      தமிழகம்
Stalin 2024-12-03

Source: provided

 

சென்னை: மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதில் திராவிட மாடல் அரசு செயலாற்றி வருகிறது என்று முதல்வர் மு.. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா. சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3-ஐ அனுசரிக்கின்றது.

இது தொடர்பாக முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,

அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக ஐ.நா. அறிவித்துள்ளது.

அந்த வகையில், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும். நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு.

சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து