முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி அரியாணாவில் இணைய சேவை முடக்கம்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024      இந்தியா
Former 2024-12-14

Source: provided

புதுடெல்லி: தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி செல்ல முயற்சியால் அரியாணாவில் 12 கிராமங்களஇல் இணைய சேவை முடக்கப்பட்டன.

மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021-ம் ஆண்டு 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.

விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். டெல்லியில் முகாமிட்டு போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர்.

கடந்த 6 மற்றும் 8-ந் தேதிகளில் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை முன்னேறி செல்லவிடாமல் தடுத்தனர். இதையும் மீறி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் விவசாயிகள் சிலர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் குறைந்த பட்ச ஆகார விலையை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை நோக்கி நேற்று பேரணி சென்றனர். அரியானா மாநிலம் ஷம்பு எல்லை பகுதியில் இருந்து 101 விவசாயிகள் அமைப்பு நேற்று பிற்பகலில் டெல்லியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இதை விவசாயிகள் அமைப்பான கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.

டெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம் நடத்த வருவது 3-வது முயற்சியாகும். விவசாயிகள் டெல்லியை நோக்கி அணி வகுத்து வருவதையொட்டி அரியானா, பஞ்சாப் எல்லையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. இதற்கிடையே விவசாயிகள் குவிவதை தடுக்கும் வகையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 12 கிராமங்களில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.வருகிற 17-ம் தேதி வரை இணைய தள சேவை முடக்கப்பட்டது. அதே நேரத்தில் செல்போன் சேவை, வங்கிசேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து