முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி., கவுண்டி போட்டிகளில் விளையாடுகிறார் விராட் கோலி?

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

புதுடெல்லி : இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றுப்பயணம்...

இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இந்திய அணி அடுத்ததாக வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக அங்குள்ள சூழ்நிலைகளுக்கு தயாராகும் பொருட்டு விராட் கோலி அங்கு நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நியமிக்கப்படலாம்...

இருப்பினும், இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் போது அங்கு கவுண்டி போட்டிகள் நடைபெறுவதால் விராட் கோலி கவுண்டி கிரிகெட்டில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை பெங்களூரு அணி, ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் விராட் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட சுமார் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து