முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல் புற்றுநோயால் ஆஸி. முன்னாள் கேப்டன் பாதிப்பு

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Aasthirliya 2025-08-26

Source: provided

சிட்னி : ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் புற்று நோயால் பாதிப்பு.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அதில், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தோல் புற்று நோய் என்பது உண்மையான ஒன்று. நேற்று எனது மூக்கில் இருந்த கேன்சரை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கி இருக்கிறார்கள். நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களுடைய தோல்களையும் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்னுடைய விஷயத்தில், நோய் வருவதற்கு முன்பே காத்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்ததாக உள்ளது. நான் தொடர்ந்து சிகிச்சைகள் எடுத்து வருகின்றேன். ஆரம்பத்திலே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கின்றது.

என்னுடைய மருத்துவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அகற்றி விட்டார்கள். என்று கிளார்க் கூறியுள்ளார். கிளார்க், 115 டெஸ்ட் போட்டியில் விளையாடி 8643 ரன்கள் அடித்திருக்கின்றார். இதில் 28 சதம் அடங்கும். இதேபோன்று 245 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7981 ரன்கள் அடித்துள்ளார். 2015-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். 2015 ஆஷஸ் தொடருக்கு பிறகு கிளார்க் ஓய்வெடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து