முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் டிரில்லியன் டாலர்களை கஜானாவில் சேர்த்துள்ளோம் : அதிபர் ட்ரம்ப் பெருமிதம்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2025      உலகம்
Trump 2024-11-06

Source: provided

வாஷிங்டன் : வெளிநாடுகள், பில்லியன்கள் அல்ல... டிரில்லியன் டாலர்களை எங்களுடைய கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளால் அந்நாட்டுக்கு பொருளாதார வளம் சேருகிறது என்றும் அது உக்ரைனுக்கு எதிரான போரை ஊக்குவிக்கிறது என்றும் அமெரிக்கா கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்கு எதிரான நடவடிக்கையாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு இந்தியா மீது வரிகளை விதித்து வருகிறது.

இதன்படி, 25 சதவீத கூடுதல் வரி உள்பட மொத்தம் 50 சதவீத வரியானது இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என ட்ரம்ப் அரசு தெரிவித்தது. இந்திய இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரி தொடர்பான நோட்டீஸ் ஒன்றையும் அமெரிக்கா நேற்று முன்தினம் பிறப்பித்தது. இந்த நடைமுறை நேற்று (27-ந்தேதி) அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதற்கான அலுவல்பூர்வ அறிவிப்பு ஒன்றை ட்ரம்ப் நிர்வாகம்  பிறப்பித்தது. இதன்படி, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும்.

அந்த அறிவிப்பில், ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக புதிய வரிவிதிப்புகள் அமல்படுத்தப்படும். இந்த கொள்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவுக்கு இந்த வரி விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு கிடைக்கும் வருவாய் பற்றிய செய்தியாளர் கேள்விக்கு பதிலாக ட்ரம்ப் கூறும்போது, நாங்கள் இங்கிலாந்து, சீனா, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம்.

அதனால் வெளிநாடுகள், பில்லியன்கள் அல்ல... டிரில்லியன் டாலர்களை எங்களுடைய கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

அவர் அதற்கு முன்பு ட்ரூத் சோசியலில் வெளியிட்ட செய்தியில், இந்தியா எங்களுடைய நட்பு நாடு என்றபோதிலும், அவர்களுடைய வரி விதிப்பு அதிக அளவில் உள்ளது. அது உலகிலேயே மிக அதிகம். வேறு எந்த நாட்டையும் விட நிதி சாராத வர்த்தக தடைகளை இந்தியா கொண்டுள்ளது என்றும் குற்றச்சாட்டாக பதிவிட்டார்.

ரஷ்யாவுடன் சேர்ந்து அதிக அளவில் ராணுவ தளவாடங்களையும் அவர்கள் வாங்கி வருகின்றனர் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து