எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, இன்று நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், த.வெ.க. தொண்டர்களுக்கு கட்சி தலைமை முக்கிய அறிவிறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தீவிர முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் தற்போது விஜய் ஈடுபட்டுள்ளார். தனது முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார்.
அதனைத்தொடர்ந்து 20-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார். இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், விஜய் மேற்கொள்ளும் மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்களும், பொதுமக்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என த.வெ.க. கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருவதை அனைவரும் அறிவீர்கள். நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், நம் வெற்றித் தலைவர் கலந்துகொள்ள உள்ளார். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. எனவே நம் வெற்றித் தலைவரின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும், பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.
நம் தலைவர், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்டு சுவர்கள், மரங்கள், மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களின் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.
கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.
காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்களைக் கண்டிப்பாக நிறுத்தக் கூடாது. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அல்லது அங்கே செல்லும் வழிகள் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
நம் கழகத் தலைவரின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவரின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-09-2025.
26 Sep 2025 -
ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் : தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவிப்பு
26 Sep 2025சென்னை : ஆயுத பூஜை, விஜயதசமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு : கேரள முதல்வர் குற்றச்சாட்டு
26 Sep 2025திருவனந்தபுரம் : ஜி.எஸ்.டி.
-
93-வது பிறந்தநாளை முன்னிட்டு மன்மோகன் சிங்கிற்கு பிரதமர், ராகுல் வாழத்து
26 Sep 2025டெல்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் தசரா பண்டிகை: காளி வேடம் அணிந்த பக்தர்கள்
26 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் காளி வேடம் அணிந்து வந்தனர்.
-
தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டம் 2 ஆக பிரிப்பு
26 Sep 2025சென்னை, தி.மு.க.வில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்ட தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு நெல்லை கிழக்கு, நெல்லை மேற்கு என 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
-
பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் பேச்சுவார்த்தை
26 Sep 2025டெல்லி : பிரதமர் மோடியுடன் ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி நிகோலாயெவிச் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கோவை, நீலகிரி உள்ளிட்ட இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
26 Sep 2025சென்னை, தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேற்கு கரை இஸ்ரேலுடன் இணைப்பா? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மறுப்பு
26 Sep 2025வாஷிங்டன் : மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
26 Sep 2025தென்காசி, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்ட நிலையில், இதற்கான ஆணையை மாணவியின் பெற்றோரிடம் தென்காசி மா
-
பீகார் மாநிலத்தில் சுயமாக தொழில் தொடங்க 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 நிதியுதவி: புதிய திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
26 Sep 2025புதுடெல்லி, பீகாரில் 75 லட்சம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி த
-
தி.மு.க.வுக்காக பிரச்சாரம்: நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
26 Sep 2025சென்னை : 2026 தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய உள்ளேன் என்று நடிகர் எஸ்.பி.சேகர் தெரிவித்துள்ளார்.
-
விடைபெற்றது 'மிக்-21 போர் விமானம்: இந்திய - ரஷ்ய உறவுக்கு ஆழமான சான்று என ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி
26 Sep 2025சண்டிகர், இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது.
-
ராமதாசை கொலை செய்ய சதி: அருள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
26 Sep 2025சென்னை, ராமதாசை கொலை செய்ய நினைக்கிறார்கள் என்று அருள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது குண்டு பாய்ந்து இளைஞர் பரிதாப பலி
26 Sep 2025கள்ளக்குறிச்சி : நாடடு துப்பாக்கியால் கோழியை சுட்டதில் தவறுதலாக இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
-
தொடரை வென்ற இந்திய அணி
26 Sep 2025இந்திய இளையோர் கிரிக்கெட் அணி (19- வயதுக்குட்பட்டோர்) ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர்களில் விளையாடுகிறது.
-
விசாரணையின்போது சிறுவன் மரணம்; 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறை; ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி தீர்ப்பு
26 Sep 2025மதுரை, விசாரணையின்போது மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த சிறுவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து 4 காவலர்களுக்கு 11 ஆண்டுகள் சிறையை மதுரை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
-
லடாக் வன்முறை: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடி கைது
26 Sep 2025புதுடெல்லி : லடாக் வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
-
அக்டோபர் 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க முதல்வருக்கு கோரிக்கை மனு
26 Sep 2025சென்னை : வருகிற 3-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
-
விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள் : வருண் சக்ரவர்த்தி பேட்டி
26 Sep 2025துபாய் : பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்துவது மட்டுமே குறிக்கோள். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்து, அதை சற்று திரும்ப செய்வதுதான் எனது பணி.
-
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: தொடரை வென்றது இந்தியா 'ஏ'
26 Sep 2025லக்னோ : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய ஏ அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா ஏ அணி.
போட்டி டிரா...
-
ஐகோர்ட் கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்
26 Sep 2025மதுரை : மதுரை ஐகோர்ட்க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
819 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 21.40 கோடி ரூபாய் உயரிய ஊக்கத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
26 Sep 2025சென்னை, விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை மற்றும் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங
-
நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல: விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி மறைமுக விமர்சனம்
26 Sep 2025சென்னை, நடிகர் விஜய் மீது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
கரூரில் இன்று விஜய் பிரசாரம்; த.வெ.க. தொண்டர்களுக்கு கட்சி தலைமை முக்கிய அறிவுறுத்தல்
26 Sep 2025சென்னை, இன்று நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், த.வெ.க.