முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2025      சினிமா
Dulquer-Prithviraj 2025-09-

Source: provided

கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொச்சியில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகியோருக்கு கேரள மாநிலம் கொச்சியில் சொகுசு வீடுகள் உள்ளன. இந்நிலையில் தான் கொச்சியில் உள்ள இருவரின் வீடுகளிலும் திடீரென்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

பூட்டானில் உயர்ரக வாகனங்களை ஏலத்தில் குறைந்த விலையில் வாங்கி, அதனை இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்து அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்துள்ளனர். நடிகர்களை குறிவைத்து இந்த விற்பனை நடந்துள்ளதாக தெரிகிறது. இது மத்திய அரசுக்கு பண இழப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

அதன் ஒரு பகுதியாக நேற்று நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் வீடுகள் உள்பட கேரளாவில் 30 இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கேரளத்திற்குள் மட்டும் 20 கார்கள் கொண்டு வந்ததாகவும் அவற்றை நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் உள்ளிட்டோரும் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

முறையான வரி செலுத்தாமல் வெளிநாட்டு சொகுசு கார்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்து அதனை விற்பனை செய்தது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து