முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது குண்டு பாய்ந்து இளைஞர் பரிதாப பலி

வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர் 2025      தமிழகம்
Gan 2025-09-26

Source: provided

கள்ளக்குறிச்சி : நாடடு துப்பாக்கியால் கோழியை சுட்டதில் தவறுதலாக இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கரியலூர் அருகே மேல்மதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இந்நிலையில், அண்ணாமலை நேற்று தனது மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைக்க நினைத்துள்ளார். இதற்காக வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு கோழியை சுட்டுப்பிடிக்க முயற்சித்துள்ளார்.

அதன்படி அண்ணாமலை தனது வீட்டின் அருகே இருந்த கோழியை நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக குறி தவறி துப்பாக்கி குண்டு பக்கத்து வீட்டில் படுத்திருந்த பிரகாஷ் என்ற இளைஞரின் தலைமையில் பாய்ந்தது.

துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் பிரகாஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலையை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், அண்ணாமலையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து