முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் கொடுக்க மாட்டோம்: நாமக்கல் பிரச்சாரத்தில்விஜய் உறுதி

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      தமிழகம்
Vijay-2025-09-27

நாமக்கல், நாமக்கல்லில் மக்களுடன் சந்திப்பு பெயரில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்,பொய்யான வாக்குறுதிகளை எப்பவும் கொடுக்க மாட்டோம் என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது., ஏன் எந்த விஜய் எந்த இடத்திற்கு சென்றாலும் கேள்வியாக கேட்கிறார் இதற்கான விளக்கத்தை ஏற்கனவே இரண்டு இடத்தில் கூறியிருந்தோம் கல்வி ரேஷன் மருத்துவம் அடிப்படை சாலை வசதி மின்சாரம் போக்குவரத்து பெண்கள் பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு இது போன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசம் இல்லாமல் சரியாக செய்யப்படும் என கூறியிருந்தோம் இதைத்தானே எல்லோரும் சொன்னார்கள் அதைத்தான் இவரும் சொல்றாரு இவர் புதிதாக ஏதும் சொல்லவில்லை.

ஐயா அரசியல் மேதைகளே பெரியவர்களே ஒரு மனிதனுக்கு சாப்பிடுவதற்கு நல்ல சாப்பாடு படிப்பதற்கு நல்ல கல்வி குடிப்பதற்கு நல்ல குடிநீர் மருத்துவ வசதி வேணுன்ற இடத்திற்கு போயிட்டு வர ஒரு சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இதுதான் ஒரு அடிப்படை மனிதனுக்கு தேவை. அப்புறம் அதை சரியாக செய்வோம் என்று சொல்வது தானே சரி. இது தி.மு.க. மாதிரி பொய்யான வாக்குறுதிகளை எப்பொழுதும் கொடுக்க மாட்டோம்.

புதுசா சொல்லுங்க புதுசா சொல்லுங்கண்ணா என்னத்த சொல்ல சொல்றீங்க எனக்கு புரியலையே. புதுசா என்னப்பா சொல்றது செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவிற்கு ஒத்தையடி பாதை போடப்படும், வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும், இது போன்ற அடித்து விடுவோமா நம்முடைய முதலமைச்சர் அடித்து விடுவாரே அது போன்ற அடித்து விடுவோமா.

தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கிட்னி திருட்டு., அதுதான் நாடறிந்த விஷயம் ஆயிற்றே. அதை ஏற்கனவே திருச்சியில் பேசியிருந்தேன். ஆனால் நாமக்கல்லை சேர்ந்தவர்கள்தான் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக விசைத்தறையில் பணிபுரியும் ஏழை பெண்களை குறி வைத்து இந்த கிட்னி திருட்டு நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

இந்த கிட்னி திருட்டு எங்கிருந்து தொடங்கியது என்று பார்த்தால் கந்துவட்டி கொடுமையில் இருக்கிறது. அதாவது விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தையும் பொருளாதாரத்தையும் எந்த ஏற்றமும் இல்லாமல் செய்துள்ள இந்த மாடல் அரசு, மேம்படுத்தாத காரணத்தினால் அவர்கள் கிட்னியை விற்கும் அளவிற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை. விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான தேர்வுகளை யோசித்து உறுதியாக தேர்தல் அறிக்கையில் சொல்வோம். 2026 தேர்தலில் தி.மு.க.- தவெக இடையில் தான் போட்டி. தி.மு.க.விற்கு போடப்படும் ஓட்டு பாஜகவிற்கு போடப்படும் ஓட்டு. உஷாராக இருங்கள் மக்களே. வரும் தேர்தலில் ஒரு கை பார்த்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து