Idhayam Matrimony

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் கேட்டறிந்தார் ராகுல்

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      தமிழகம்
Rahul 2024-12-03

Source: provided

கரூர் : கரூர் சம்பவம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி த.வெ.க. தலைவர் விஜய்யை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 41 பேர் பலியாகியுள்ளனர். கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று த.வெ.க. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட சனிக்கிழமையன்று உடனடியாக சென்னையில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிய விஜய், அதன் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கிட்டத்தட்ட 34 மணி நேரத்திற்கு பிறகே நேற்று காலை விஜய் தனது வீட்டிலிருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். பலத்த பாதுகாப்புடன் விஜய் தனது காரில் புறப்பட்டுள்ளார். அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் வெளியாகவில்லை.

இதற்கிடையே, த.வெ.க. தலைவர் விஜயை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாகவும், பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து விஜயிடம் கேட்டறிந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து