முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போபண்ணா ஜோடி முன்னேற்றம்

சனிக்கிழமை, 27 செப்டம்பர் 2025      விளையாட்டு
Bopanna 2024-03-26

Source: provided

ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஜப்பானின் டகேரு யுசுகே ஜோடி, அர்ஜெண்டினாவின் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடி உடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி ஆதிக்கம் செலுத்திய போபண்ணா ஜோடி 7-6 (7-5), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் மேக்சிமோ கோன்சலஸ்-ஆண்ட்ரஸ் மால்டெனி ஜோடியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

_______________________________________________________________________________________

கிரிக்கெட் ரசிகன்: உசேன் போல்ட்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள அவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2014-ல் அவர் இந்தியா வந்திருந்தார். தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். 

மும்பையில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, சிறு வயது முதலே நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் வீரர்களின் திறன், அவர்களின் உழைப்பு, அதற்காக அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் விதம் உள்ளிட்டவற்றை பார்த்து வளர்ந்தேன். அவர்களது கடின உழைப்பு எனக்கு உத்வேகம் தந்தது. அந்த வகையில் நாம் சார்ந்துள்ள விஷயத்தில் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________________________________________

ஆஸி. மகளிரணி கேப்டன் கோரிக்கை

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி இந்திய ரசிகர்களை சிஎஸ்கேவின் ஜெர்ஸியை அணிந்து வருமாறு கூறியது வைரலாகி வருகிறது. மகளிருக்கான ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் செப்.30 முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்றன. ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸி. மகளிரணி ஏழு முறை வென்று வரலாறு படைக்க, இந்திய மகளிரணி ஒருமுறைக்கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆஸி. மகளிரணி கேப்டன் அலீஸா ஹீலி பேசியதாவது: மஞ்சள் நிறமாக தோனியின் சிஎஸ்கே ஜெர்ஸியை இந்திய ரசிகர்கள் அணிந்து வந்தால் எனக்கு பிடிக்கும். அது மிகவும் சிறப்பாக இருக்கும். கூட்டத்தில் மஞ்சள் நிறமும் இருந்தால் நன்றாக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான அணியாக எங்களை முத்திரைக் குத்தியுள்ளீர்கள். அதற்கு நன்றி. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். இதுவரை விளையாடியதிலேயே மிகப்பெரிய உலகக் கோப்பையாக இருக்கும். இங்கு நல்ல ஆதரவும் ஒன்றில் மிகையான மனநிறைவும் கிடைக்கிறது என்றார்.

_______________________________________________________________________________________

வரலாறு படைத்த இலங்கை வீரர்

ஆசிய கோப்பையில் இலங்கை வீரர் பதும் நிசங்கா கோலி சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். தனது முதல் டி20 சதத்தை ஆசிய கோப்பையில் அடித்த நிசங்கா பலவேறு சாதனைகளைக்குச் சொந்தக்காரராக மாறியுள்ளார். ஆசிய கோப்பை சூப்பர் 4-இல் கடைசி போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 202/ 5 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய இலங்கை அணியும் 202/5 எடுத்து போட்டி டிரா ஆனது. சூப்பர் ஓவரில் இந்திய அணி எளிதாக வென்றது.

இதில், இலங்கை வீரர் பதும் நிசங்கா 58 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார். இதுவரையிலான ஆசிய கோப்பை டி20-யில் அதிகமான ரன்களை குவித்தவராக நிசங்கா வரலாறு படைத்துள்ளார். ஆசிய கோப்பை டி20-யில் அதிக ரன்கள் வருமாறு., 1. பதும் நிசங்கா - 434 ரன்கள், 2. விராட் கோலி - 429 ரன்கள், 3. அபிஷேக் சர்மா - 309 ரன்கள், 4. பாபர் அயாத் - 292 ரன்கள், 5. முகமது ரிஸ்வான் - 281 ரன்கள்.

_______________________________________________________________________________________

அபிஷேக் சர்மாவுக்கு பாராட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்தன. சூப்பர் 4 சுற்றில் துபையில் (செப்டம்பர் 26) நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களைப் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி நிர்வாகம் ஊக்குவிப்பதாகவும், அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதனை இந்திய அணி நிர்வாகம் ஊக்குவிக்கிறது. அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதற்கு அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே ஆகும். ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரால் மெதுவாகவும் விளையாட முடிகிறது. அதனால், நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங்கில் சிறப்பான முன்னேற்றங்களை கண்டு வருகிறார் என்றார்.

_______________________________________________________________________________________

ஹாரி கேன் புதிய சாதனை

இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர் ஹாரி கேன் (32 வயது) கிளப் கால்பந்து போட்டிகளில் அதிவேகமாக 100 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ, எர்லிங் ஹாலண்ட் அடித்ததை விட குறைவான போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜெர்மனியின் புன்டெஸ்லீகா கால்பந்து தொடரில் எஃப்சி பெயர்ன் மியூனிக் அணியும் வெர்டர் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் ஹாரி கேன் 45 (பெனால்டி), 65ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்த, இறுதியில் 4-0 என பெயர்ன் மியூனிக் வென்றது. இத்துடன் ஹாரி கேன் பெயர்ன் மியூனிக் அணிக்காக 100 கோல்களை 104 போட்டிகளில் நிறைவு செய்துள்ளார். ஐரோப்பாவின் டாப் 5 கால்பந்து கிளப் போட்டிகளில் இவர்தான் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து