முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக யாரையாவது மிரட்டி அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சி: முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2025      தமிழகம்
Stalin 2022 12 29

ராமநாதபுரம், தமிழகத்தில் 3 முறை மிகப்பெரிய பேரிடர்கள் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத மத்திய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். இதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா எனப் பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கும் ஒட்டுண்ணியாக பா.ஜ.க. உள்ளது’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் நேற்று பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும், பல திட்டங்களை தொடங்கிவைத்தும் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “மீனவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை இலங்கை கடற்படையின் தாக்குதல்தான். இதனை நாம் தொடர்ந்து கண்டிக்கிறோம், போராட்டம் நடத்துகிறோம். ஆனால், மத்தியத்தை ஆளும் பா.ஜ.க. மீனவவர்களை காக்க எதுவும் செய்யவில்லை.

கச்சத்தீவை மீட்பதே மீனவர் நலனை காக்க உதவும் என தமிழக சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். இதனை வைத்து இலங்கை அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அதனை செய்யக்கூட மத்திய அரசு மறுக்கிறது. இலங்கை சென்ற இந்திய பிரதமரும் இதனை வலியுறுத்த மறுக்கிறார்.

கச்சத்தீவை தர மாட்டோம் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்கிறார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மறுப்பு எதுவும் சொல்லவில்லை. தமிழக மீனவர்கள் என்னால் இளக்காரமாக போய்விட்டதா? நாங்கள் இந்தியர்கள் இல்லையா?. தமிழ்நாடு, தமிழர்கள் என்றாலே மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஏன் கசக்கிறது. தமிழகத்தின் மீது ஏன் இவ்வளவு வன்மைத்தை காட்டுகிறார்கள். ஜி.எஸ்.டி., நிதிப்பகிர்வில் ஓரவஞ்சனை, சிறப்பு திட்டங்கள் அறிவிக்காதது, பள்ளிக்கல்விக்கான நிதியை மறுப்பது, நீட், தேசிய கல்விக்கொள்கை, கீழடி அறிக்கைக்கு தடை, தொகுதி மறுவரையறை என பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கு தொடர்ந்து வஞ்சனை செய்துகொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மூன்று முறை மிகப்பெரிய பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம், தமிழகத்துக்கு உடனே வராத, நிதியை தராத மத்திய நிதியமைச்சர் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துக்கள், கும்பமேளா பலிகளுக்கு எல்லாம் உடனே விசாரணைக்குழு அனுப்பாத பா.ஜ.க., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள்.

இது தமிழ்நாட்டின் மீதுள்ள அக்கறை அல்ல. அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. எனவே, இதில் ஏதேனும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி, உயிர்வாழ துடிக்கும் ஒட்டுண்ணியாக பா.ஜ.க. உள்ளது. மாநில நலன்களை பறித்து, மாநிலங்களே இருக்க கூடாது என செயல்படும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்து அதிமுக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளது. இந்த கூட்டணிக்கு ஏதாவது கொள்கை உள்ளதா? என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து