முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரானி கோப்பை கிரிக்கெட்: 3-வது முறையாக விதர்பா அணி சாம்பியன்

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      விளையாட்டு
Vitharba 2025-10-06

Source: provided

நாக்பூர் : மராட்டிய மாநிலத்துக்குட்பட்ட விதர்பா அணி இரானி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். 

232 ரன்னில் அவுட்...

நடப்பு ரஞ்சி சாம்பியன் விதர்பா - ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா 342 ரன்னும், ரெஸ்ட் ஆப் இந்தியா 214 ரன்னும் எடுத்தன. 128 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 232 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 361 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.

மானவ் சுதர்... 

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளில் தொடர்ந்து பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா 80 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. கேப்டன் ரஜத் படிதார் (10 ரன்), ருதுராஜ் கெய்க்வாட் (7 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 6-வது வரிசையில் இறங்கிய யாஷ் துல் கொஞ்ச நேரம் மிரட்டிப்பார்த்தார். அவர் 92 ரன்னில் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனதும் அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 73.5 ஓவர்களில் 267 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. மானவ் சுதர் 56 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் விதர்பா அணி 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

3-வது முறை...

ஹர்ஷ் துபே 4 விக்கெட்டும், ஆதித்யா தாக்ரே, யாஷ் தாக்குர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அதர்வா டெய்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். மராட்டிய மாநிலத்துக்குட்பட்ட விதர்பா அணி இரானி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2017-18, 2018-19-ம் ஆண்டுகளிலும் இந்த கோப்பையை வென்றிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து