முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை குறித்து ஜெமிமா

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      விளையாட்டு
Jemima 2025-10-06

Source: provided

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கொழும்புவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக கடின உழைப்பை வழங்கியவர்களுக்காக இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல விரும்புவதாகவும், வெளியில் நடக்கும் விஷயங்களிலிருந்து ஒதுங்கியிருக்க வீராங்கனைகள் முயற்சி செய்து வருவதாகவும் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம். எங்களது ஆலோசனையின்போதும் ஆட்டத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கிறோம். ஏனெனில், இந்த உலகக் கோப்பை குறித்து வெளியில் எத்தனை விஷயங்கள் சென்று கொண்டிருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும். வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல், எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இந்திய அணியில் உள்ள ஒவ்வொருவரும் சக வீராங்கனைகளின் வெற்றியை தங்களின் வெற்றியாகக் கருதி கொண்டாடுகிறோம். எங்களது இயல்பான இந்த குணம் அணியை வலுவாக வைத்துள்ளது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் வளரக் காரணமாக இருந்தவர்களுக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்புகிறோம் என்றார் என்றார்.

___________________________________________________________________________________________________

கில்லுக்கு ஆரோன் பிஞ்ச் ஆதரவு

 சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஆதரித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஆரோன் பிஞ்ச். சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக ஆரோன் பிஞ்ச் கூறியதாவது:- சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் கிரகி்கெட்டின் சிறந்த கேப்டன் என்பதை ஏற்கனவே காண்பித்து விட்டார். ஆகவே, ஒருநாள் கிரிக்கெட்டிலும் எந்த மாறுபாடும் இருக்காது என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான தொடர் மிகச் சிறந்த தொடராக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் கோலி அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவான் என நினைக்கிறேன். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆஸ்திரேலியா 2-1 எனக் கைப்பற்றும். இருந்தாலும் இதில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்தியா சிறந்த அணி. இந்த தொடரை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் என்றார்.

___________________________________________________________________________________________________

ஆஸி. வீரர் ஹர்ஜஸ் சிங் அபாரம்

ஒரு நாள் கிரேட் போட்டி ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய இடது கை வீரர் ஹர்ஜஸ் சிங் முச்சதம் விளாசினார். இதில் 35 சிக்சர்கள் அடங்கும். இவர் 141 பந்துகளில் 314 ரன்களைக் குவித்துள்ளார். இவரது இந்த முச்சதம் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் ஃபர்ஸ்ட் கிரேடு கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது பெரிய ஸ்கோர் மற்றும் ஆஸ்திரேலிய கிரேடு கிரிக்கெட்டில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும். இவர் வெஸ்டர்ன் சப் அர்ப்ஸ் அணிக்கு ஆடினார். 

இந்திய வம்சாவளி பெற்றோருக்கு சிட்னியில் பிறந்த ஹர்ஜாஸ் சிங், 2024 U-19 உலகக் கோப்பையில் சிறந்து விளங்கினார், இந்த இன்னிங்ஸ் குறித்து அவர் கூறும்போது பயிற்சி மற்றும் பவர்-ஹிட்டிங் தினசரி பிராக்டீஸ் ஆகியவையே காரணம் என்றார். சாதாரண கிரேடு லெவல் கிரிக்கெட் இவரது காட்டடியினால் பேட்டர்ன் பார்க் மைதானம் உயிர் பெற்றது. ஒருநாள் கிரேடு கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக முச்சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் அவருக்குச் சேர்த்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து