முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      இந்தியா
P R Kawai 2025-05-19

Source: provided

புது தில்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, நீதிமன்ற அறைக்குள், வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயற்சி நடந்திருக்கிறது. நல்வாய்ப்பாக சுப்ரீம் கோர்ட் காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

புது டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் வழக்கம் போல விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, கடவுள் விஷ்ணுவின் சிலை ஒன்றின் தலை, சமூக விரோதக் கும்பலால் உடைக்கப்பட்டிருக்கிறது. அதனை சரி செய்யுமாறு உத்தரவிடக் கோரி நீதிமன்ற அறையில் வழக்குரைஞர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இதற்கெல்லாம் எப்படி உத்தரவிட முடியும்? நீங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பது போன்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். நீதிபதியின் கருத்தைக் கேட்ட வழக்குரைஞர், சநாதனத்துக்கு இழுக்கு ஏற்படுமாயின், அதனை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூச்சலிட்டபடி, காலில் இருந்து காலணியைக் கழற்றியிருக்கிறார். அதனை அவர் வீசுவதற்கு முற்படுவதற்கு முன்பே, நீதிமன்றக் காவலர்கள், அவரைத் தடுத்து அவரிடமிருந்து காலணியைப் பறித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் விசாரணை அறையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது, அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவத்தில் ஈடுபட முயன்ற வழக்குரைஞரை, நீதிமன்ற பாதுகாவலர்கள் நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்துச் சென்றது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர் பற்றிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், சம்பவத்துக்குப் பிறகு வழக்கம் போல தலைமை நீதிபதி தனது பணியை தொடர்ந்தார். இதனால், எந்த வழக்கும் விசாரணையும் பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

என்னை பாதிக்காது: பி.ஆர்.கவாய்

இந்த சம்பவத்தில் “இவை எல்லாம் என்னைப் பாதிக்காது. விசாரணையைத் தொடருங்கள்” என்று கவாய் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தனது கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் தான் மதிப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து