எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சமூகநீதியை படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சாதிகளை ஒழிப்பதற்கு சிறந்த வழி என்ன? என்று ஆசிரியர் எழுப்பிய வினாவுக்கு பதிலளித்த முட்டாள் மாணவன், "அனைவரின் சாதி சான்றிதழ்களையும் வாங்கி கிழித்து எறிந்து விடலாம். அவ்வாறு செய்தால் யாரிடமும் சாதிக்கு சான்று இருக்காது. அதனால் சாதி ஒழிந்து விடும்" என்று கூறியிருந்தானாம். தமிழ்நாட்டின் தெருக்களில் சாதிகளை ஒழிக்கப் போவதாக தி.மு.க. அரசு ஆணை வெளியிட்டிருப்பதும் அப்படிப்பட்டதாகத் தான் தோன்றுகிறது.
சாதிகள் ஒழிக்கப்பட வேண்டியவையே. ஆனால், சட்டத்தைப் போட்டு சாதியை ஒழிக்க முடியாது; அரசாணைகளை வெளியிட்டு அவற்றை சாதிக்க முடியாது. மாறாக, அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும். எனவே, சாதியை ஒழிப்பதற்கான சிறந்த வழி சமத்துவத்தை நோக்கி சமூகநீதிப் பாதையில் பயணிப்பது தான். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காத தி.மு.க. அரசு, சீனி, சக்கரை என்று காகிதத்தில் எழுதி நாக்கில் ஒட்டிக் கொண்டு இனிப்பதைப் போன்று நடிப்பதைப் போலவே, கிராம சபைக் கூட்டங்களில், தெருக்களின் சாதிப் பெயர்களை நீக்குவதற்கான தீர்மானங்களை இயற்றுவதன் மூலம் சாதிகளை ஒழிக்கப் போவதாக மாயையில் உழன்று கொண்டிருக்கிறது.
சமூக ஏற்றத்தாழ்வுகள் தான் சாதியை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க. முதன்முதலில் ஆட்சிக்கு வந்து 58 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதற்காக ஆக்கப்பூர்வமாக எதை செய்திருக்கிறது? சாதியை ஒழிக்கும் நோக்குடன் தான் இடஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன. கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலையை உயர்த்தலாம்; அதன் மூலம் என்றாவது ஒருநாள் சாதி ஒழியும் என்பது தான் சமூகநீதியாளர்களின் நோக்கம். ஆனால், அந்த நோக்கத்தை நிறைவேற்ற தி.மு.க. என்ன செய்திருக்கிறது?
தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் பயன்கள் இன்னும் முழுமையாக அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக இருந்தாலும், பட்டியலினமாக இருந்தாலும் அந்த வகுப்புகளுக்குள் இட ஒதுக்கீட்டின் பயன்களை முழுமையாக அனுபவிக்காத சமுதாயங்கள் ஏராளமாக உள்ளன. அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டின் பயன்களை கிடைக்கச் செய்வதற்கான ஒரே தீர்வு உள் இடஒதுக்கீடு தான். தமிழ்நாட்டில் உள் இட ஒதுக்கீடுகளை வழங்க தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
அண்டை மாநிலமான கேரளத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 40 சதவீத இடஒதுக்கீடு 8 பிரிவுகளாக பிரித்து வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கர்நாடகத்தில் 6 பிரிவுகளாகவும், ஆந்திரம் மற்றும் தெலுங்கானத்தில் 5 பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் விடுதலைக்குப் பின்னர் 42 ஆண்டுகள் வரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஒரே பிரிவாகவே இருந்தது. ராமதாஸ் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாகத் தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு தனியாக ஏற்படுத்தப்பட்டது; இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சமூகநீதியில் பிற தென்னிந்திய மாநிலங்களை விட தமிழகம் பல படிகள் பின் தங்கிக் கிடக்கிறது. இதை சரி செய்ய தி.மு.க. மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வருவதன் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயனடைந்து வந்தனர். ஆனால், அரசு பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பாமல், தற்காலிக நியமனங்கள், குத்தகை நியமனங்கள், ஒப்பந்த நியமனங்கள் ஆகிய முறைகளில் பணியாளர்களை நியமிப்பதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை மறைமுகமாக ஒழித்துக் கட்டியது தி.மு.க. அரசு தானே. சமூகநீதியை இப்படியெல்லாம் படுகொலை செய்யும் தி.மு.க. அரசு சாதி ஒழிப்பைப் பற்றி பேசலாமா? அனைத்து மக்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்கான அடிப்படைத் தேவை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தான். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதை பயன்படுத்தி தான் இந்தியாவில் கர்நாடகா, தெலுங்கானா, பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிகாரம் இல்லை என்று கூறி தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மு.க.ஸ்டாலின் அரசு மறுப்பது ஏன்? தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூக நீதியை குழி தோண்டி புதைத்தது தி.மு.க. அரசுதான். அப்படிப்பட்ட தி.மு.க.வுக்கு சமத்துவம் குறித்தோ, சாதி ஒழிப்பு குறித்தோ பேசுவதற்கு தகுதி உண்டா?
தமிழ்நாட்டில் தந்தைப் பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை நீக்குவதாகக் கூறி அனைத்து சாதி அர்ச்சகர் சட்டத்தை தி.மு.க. அரசு இயற்றியது. அந்த சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட 24 அர்ச்சகர்களில் 10 பேர் தங்களை கருவறைக்குள் செல்ல அங்குள்ள பரம்பரை அர்ச்சகர்கள் விடுவதில்லை; கோவிலை சுத்தம் செய்யும் பணி தான் வழங்கப்படுகிறது என்று வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அந்த அவலத்தை போக்க தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை என்ன? இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்று பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி வழங்கப்படாத 209 அர்ச்சகர்களுக்கு பணி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின் இன்று வரை அதை நிறைவேற்றாதது தான் சமூகநீதியா? சாதியற்ற சமுதாயத்தை உருவாக்கப் போவதாகக் கூறும் தி.மு.க., அதன் 76 ஆண்டு கால வரலாற்றில் எத்தனை பட்டியலினத்தவரை பொதுத் தொகுதிகளில் நிறுத்தி வெற்றி பெறச் செய்திருக்கிறது? தி.மு.க.வின் பட்டியலின முகமாக அறியப்படும் ஆ.ராசவைக் கூட, அவரது சொந்தத் தொகுதியான பெரம்பலூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு, அங்கு நிறுத்தாமல் 350 கி.மீ தொலைவில் உள்ள நீலகிரிக்கு அனுப்பி வைத்த கட்சி தானே தி.மு.க.. பாட்டாளி மக்கள் கட்சியைப் போன்று தி.மு.க.வின் 3 முதன்மைப் பதவிகளில் ஒன்றை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கும் துணிச்சல் தி.மு.க.வுக்கு உண்டா? இப்படியாக சமத்துவத்தை ஏற்படுத்தவும், சாதியை ஒழிக்கவும் துரும்பைக் கூட கிள்ளிப் போடாத தி.மு.க. சாதி ஒழிப்பு பற்றி பேசலாமா?
தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதாக அரசாணை வெளியிட்ட அடுத்த நாளே கோவை பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டிய இரட்டை வேடக் கட்சி தானே தி.மு.க.? அப்படிப்பட்ட தி.மு.க. அரசாணைகளை பிறப்பிப்பதன் மூலம் சாதியை ஒழிக்கப் போவதாக நாடகங்களை நடத்தக் கூடாது. மாறாக, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு, அரசு பணிகளை தற்காலிகமாக நிரப்பாமல், இட ஒதுக்கீட்டை பின்பற்றி நிரந்தரமாக நிரப்புதல் ஆகியவற்றின் வாயிலாகத் தான் சாதியை ஒழிக்க முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: பிரதமர் இரங்கல் - நிவாரணம் அறிவிப்பு
07 Dec 2025கோவா, கோவா தீவிபத்தில் 23 பேர் பலியான சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் சனாதனத்தை எதிர்க்கிறோம்: அமைச்சர்
07 Dec 2025சென்னை, “இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு.
-
ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டம்: அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு
07 Dec 2025கரூர், வருகிற 16-ம் தேதி ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025
07 Dec 2025 -
மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்து: புதிதாக 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
07 Dec 2025சென்னை, மதுரை முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,660 கோடி முதலீட்டிற்கான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
-
அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு
07 Dec 2025கீர்ட், மத்திய தரைக்கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி
07 Dec 2025பிரிஸ்பென், ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
-
படைவீரர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம்: பிரதமர் மோடி அழைப்பு
07 Dec 2025டெல்லி, படைவீரர் கொடி நாள் நிதிக்கு மக்கள் அதிக அளவில் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
பரந்த மனப்பான்மையுடன் கொடி நாள் நிதி அளிப்போம்: துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்தல்
07 Dec 2025சென்னை, படை வீரர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும் என்றும் துணை நிற்போம்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
07 Dec 2025கோவை, கோவை மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
நாம் தமிழர் கட்சி சார்பில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
07 Dec 2025சென்னை, சட்டமன்ற தேர்தலில் நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்களை சீமான் அறிவித்துள்ளார்.
-
கோவா தீ விபத்து குறித்து விரிவான விசாரணை தேவை: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
07 Dec 2025புதுடெல்லி, வடக்கு கோவாவின் அர்போராவில் இரவு விடுதி ஒன்றில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள
-
களைகட்டும் விழாக்கால கொண்டாட்டம்: நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்
07 Dec 2025வாஷிங்டன், நியூயார்க் நகரில் 7 மாடி உயர பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.
-
4 மணிநேரம் காத்திருந்து திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
07 Dec 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாளான நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீரா
-
கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள்: திருப்பூரில் டி.டி.வி.தினகரன் பேட்டி
07 Dec 2025திருப்பூர், கூட்டணி தொடர்பாக சில கட்சிகள் எங்களுடன் பேசி வருகிறார்கள் என்று திருப்பூரில் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் பெரியசாமி கருத்து
07 Dec 2025திண்டுக்கல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை என அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு: அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
07 Dec 2025அலாஸ்கா, அமெரிக்காவின் அலாஸ்கா-கனடா எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வளர்ச்சி திட்டங்களை சகித்துக்கொள்ளாமல் சதி செய்கிறார்கள்: மதுரையில் பிரிவினையை உருவாக்கவே முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
07 Dec 2025மதுரை, வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியததால், சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் பிரிவினையை உருவாக்க முடியாது என்றும் எப்பட
-
சென்னையில் ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் 4-வது நாளாக அவதி
07 Dec 2025சென்னை, சென்னையில் ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் 4-வது நாளாக அவதிகுள்ளாகினர்.
-
சட்டம் - ஒழுங்கு விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
07 Dec 2025சென்னை, அ.தி.மு.க.
-
டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்பு
07 Dec 2025சென்னை, தமிழகத்தில் டிச.13 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் காயம்
07 Dec 2025மன்னார்குடி, மீண்டும் ஒரு சம்பவமாக மன்னார்குடியில் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துனர்.
-
புதிய பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகள்: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
07 Dec 2025மதுரை, மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி புதிய பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
-
சூடானில் நடந்த டிரோன் தாக்குதலில் 116 பேர் பலி
07 Dec 2025கார்டூமின், சூடானில் டிரோன் தாக்குதலில் பள்ளிக்குழந்தைகள் உள்பட 116 பேர் பலியான சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்னொரு முகத்தை காட்டி உள்ளார் நயினார்: சபாநாயகர் அப்பாவு தாக்கு
07 Dec 2025நெல்லை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்னொரு முகத்தை காட்டி உள்ளார் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மீது சபாநாயகர் அப்பாவு குற்றஞ்சாட்டியுள்ளார்.


