எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : முதல் முறையாக டாஸ் வென்ற கேப்டன் சுப்மன் கில்லை வீரர்கள் கலாய்த்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சுற்றுப்பயணம்...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது.
முதல் முறையாக..
முன்னதாக சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 6 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் தான் முதல் முறையாக டாஸை வென்றுள்ளார். சுப்மன் கில் டாஸ் வென்றதை பின்னாடி இருந்த பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஜடேஜா, அக்ஷர் படேல், பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் ஒருவழியா டாஸில் வெற்றி பெற்று விட்டார் என்பது போல சிரித்து கொண்டனர்.
சிரித்துக் கொண்டே...
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வந்த கில்லுக்கு சக வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் பாராட்டினர். அப்போது கம்பீர் கில்லிடம் நீ எப்படியும் டாஸில் தோல்வியடைந்து விடுவாய் என பும்ரா பவுலிங் போடுவதற்கு ரன் அப்புக்கு ஏற்பாடு செய்ய கிளம்பினார் என சிரித்துக் கொண்டே கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


