முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அச்சமற்ற சுதந்திர போராட்ட வீரர்: ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு குடியரசு துணை தலைவர் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2025      இந்தியா
C P -Radhakrishnan 2025-03-

Source: provided

புதுடெல்லி : பீகாரின் சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் அச்சமற்ற சுதந்திர போராட்ட வீரர் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். 

சோசலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு, பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள சிதாப் தியாராவில் உள்ள ஜெயபிரகாஷ் இல்லத்துக்கு, குடியரசு துணைத் தலைவர் சிபிஆர் நேரில் சென்றார். அங்கு, ஜெயபிரகாஷ் நாராயண் கிராமத்தில் உள்ள அவரது தேசிய நினைவுச் சின்னத்திற்கு அவர் மலர் அஞ்சலி செலுத்தினார். சோசலிசத் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஜெயபிரகாஷ் நாராயணின் மனைவியின் பெயரிடப்பட்ட புத்தகக் கடையான ‘பிரபாவதி புஸ்தகலயா’வையும் அவர் பார்வையிட்டார்.

இதனிடையே, தனது 19 வயதில், 1974ம் ஆண்டு நாராயண் தொடங்கிய ‘சம்பூர்ண கிராந்தி’ (முழு புரட்சி) நிகழ்ச்சியில் தான் இணைந்திருந்ததாக குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார். எனது 19வது வயதில் அவரது முழுமையான புரட்சிக்கான அழைப்பில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது, அதில் முழு வீரியத்துடன் பங்கேற்றேன். அவரது மரபு எப்போதும் நமது முன்னோக்கிச் செல்லும் பாதையை ஒளிரச் செய்யட்டும். அவரது தொலை நோக்குப் பார்வையும் லட்சியங்களும் என்னையும் எண்ணற்ற மற்றவர்களையும் நீதியான மற்றும் சுதந்திரமான இந்தியாவுக்காகப் பாடுபடத் தொடர்ந்து ஊக்கப்படுத்துகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து