எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர் பராசரன் என சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் புகழாரம் சூட்டினர்.
பத்ம விபூஷன் விருது பெற்ற சுப்ரீம் கோர்ட்மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான 98 வயதாகும் கே.பராசரன், 75 ஆண்டுகாலமாக வழக்கறிஞராக பணியாற்றி வருவதை கொண்டாடும் வகையில் பவள விழாவும், 50 ஆண்டுகளாக மூத்த வழக்கறிஞராக நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் பொன் விழாவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பி்ல் கொண்டாடப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் விக்ரம்நாத்தும், எம்.எம்.சுந்தரேஷூம் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர். ‘‘நீதித்துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் உறுதி செய்தவர் மூத்த வழக்கறிஞர் பராசரன். அவரிடம் பாலபாடம் கற்ற பலர் இன்று நீதிபதிகளாக ஜொலித்து வருகின்றனர். அவருக்கு விழா எடுப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். வழக்கறிஞர் தொழிலின் முன்னோடியாக, தொழிலை எப்படி நேர்த்தியாக கையாள வேண்டும் என இன்றைய இளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தவர் பராசரன்’’ என்று சுப்ரீம் கோர்ட்நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், விக்ரம்நாத் ஆகியோர் புகழாரம் சூட்டினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


