முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு : மக்களின் புகார்களை நேரடியாக கேட்டறிந்தார்

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      தமிழகம்
DCM 2025-10-15

Source: provided

சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உதவி எண்ணிற்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை நேரடியாக கேட்டறிந்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (15.10.2025) பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், பொதுமக்களிடமிருந்து சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி எண்ணிற்கு வரப்பெற்ற புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கணினிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், 1913 என்ற உதவி எண்ணிற்கு பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை நேரடியாக கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய எல்.ஈ.டி திரைகள் மூலமாக நகரின் பல்வேறு இடங்களில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக நடைபெறுவதையும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 9.00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 38.19 மி.மீட்டர் மழை பெய்துள்ளதையும், அதிகபட்சமாக எண்ணூரில் 136.50 மி.மீட்டர் பெய்துள்ளதையும், குறைந்தபட்சமாக அம்பத்தூரில் 0.30 மி.மீட்டர் மழை பெய்துள்ள விவரங்களையும்துணை முதல்-அமைச்சர் மின்னணு திரையில் பார்வையிட்டார். மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு கால்வாய்களில் மழை நீர் தடையின்றி செல்வதையும், நேப்பியர் பாலம் அருகில் உள்ள முகத்துவாரத்தில் நீர் தடையின்றி கடலுக்கு செல்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளின் விவரங்கள் குறித்து நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கேட்டறிந்தார்.

அதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பதில் தெரிவிக்கையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் மழைநீரை வெளியேற்றும் வகையில் 100 ஹெச்.பி திறன் கொண்ட 150 மோட்டார் பம்புகள், டிராக்டர் மேல் பொருத்தப்பட்ட 500 மோட்டார் பம்புகள் உள்பட பல்வேறு திறன் கொண்ட 1,436 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

பல்வேறு கால்வாய்களில் பணிகள் மேற்கொள்வதற்காக 2 ஆம்பிபியன்கள், 3 ஆம்பிபியன் எஸ்கவேட்டர்கள், 6 ரோபோடிக் எஸ்கவேட்டர்கள், 3 மினி ஆம்பிபியன்கள், 7 சூப்பர் சக்கர் வாகனங்கள், 15 மரக்கிளை அகற்றும் சக்திமான் வாகனங்கள், உட்பட மொத்தம் 478 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களும், 489 மர அறுவை இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த நான்காண்டுகளில் 1,217 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன, இதுவரை 1,136 கிலோமீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய்களும், 1 லட்சத்து 6 ஆயிரம் வண்டல் வடிகட்டி தொட்டிகளும் தூர்வாரப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து