முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்பு

வெள்ளிக்கிழமை, 30 ஜனவரி 2026      தமிழகம்
Suicide 2023 04 29

சென்னை, கொலை செய்து வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் பெருங்குடி குப்பை கிடங்கில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 26-ந்தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

காவலாளி சிக்கந்தரிடம் வேலை கேட்டு அடைக்கலமான நிலையில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மீது சிக்கந்தருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மது போதையில் சிக்கந்தர் தனது நண்பர்களோடு சேர்ந்து முனிதா குமாரியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் தான் சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கவுரவ் குமார், முனிதா குமாரி, 2 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொன்று தனித்தனியாக மூட்டை கட்டி வீசியது தெரிய வந்தது.

முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசிய கொலையாளிகள் கவுரவ் குமாரின் உடலை நடுரோட்டில் போட்டுச் சென்றதால் இந்த கொலை சம்பவம் உடனடியாக வெளியில் தெரியவந்தது. இதை தொடர்ந்து குழந்தையின் உடலை அதே பகுதியில் கூவத்தில் மீட்ட போலீசார் கடந்த 4 நாட்களாக பீகார் வாலிபரின் மனைவி முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடி வந்தனர்.

கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முனிதா குமாரியும், குழந்தையும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கடந்த 4 நாட்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பெருங்குடி குப்பை கிடங்கில் தெரு நாய்கள் புகுந்து உடலை தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாகவும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்தனர்.

ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் வாலிபரின் மனைவியான முனிதா குமாரியின் உடல் நேற்று மீட்கப்பட்டது. பீகார் வாலிபர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையின் உடல் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் முனிதா குமாரின் உடலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதற்காக பீகார் வாலிபர் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். 3 பேரின் உடல்களும் ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது. கொலையுண்ட முனிதா குமாரி காவலாளி சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முனிதா குமாரியின் பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் கற்பழிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து