முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டில் எஸ்.டி.டி.யை அதிகரித்ததால் பங்குச்சந்தைகள் திடீர் வீழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2026      இந்தியா
Share-market

புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எஸ்.டி.டி. வரி உயர்வை உயர்த்தி அறிவித்தன் காரணமாக நேற்று பங்குச்சந்தைகள் எதிர்பாராத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தன.

முந்தைய ஆண்டுகளில் இல்லாத வகையில் 2026- 27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று, ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி பங்குச்சந்தைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்ஜெட் அறிவிப்பால் பங்குச்சந்தைகள் ஏற்றம் பெறும் என்று நினைத்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக அமைந்துவிட்டது. அதற்குக் காரணம் பங்குச்சந்தை தொடர்பான பங்குகள் பரிவர்த்தனை வரி (எஸ்.டி.டி.). பங்குச்சந்தைகளில் பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் செலுத்தப்படும் வரி. இந்த வரி விகிதத்தை உயர்த்தி மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது பங்குச் சந்தையில் நிலவும் அதிகப்படியான ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் மீதான வரிகள் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளார்.

ஃபியூச்சர்ஸ் மீதான வரி 0.02%ல் இருந்து 0.05% ஆகவும், ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான வரி 0.1%ல் இருந்து 0.15% ஆகவும் உயர்த்தப்படுகிறது. பெரும்பாலான பங்குச்சந்தை வர்த்தக நிறுவனங்கள், தரகர்கள் இதனால் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. வரி அதிகமாகும்போது அவர்களுக்கான லாபம் குறையும் என்று சொல்லப்படுகிறது. எனினும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் உள்ள ஊக வணிகங்களை நீக்கவே கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது என்றும் அதேநேரத்தில் குறுகிய காலத்திற்கு பங்குகளை வாங்கி விற்பவர்களுக்கு இது சிரமமாக இருக்கும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதன் எதிரொலியாகவே பங்குச்சந்தை நேற்று கடும் சரிவைச் சந்தித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து