முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் இல்லை: பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.,க்கள் கடும் முழக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 பெப்ரவரி 2026      இந்தியா
Parliament-2024-11-27

புதுடெல்லி, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த உடன் அவை இன்று காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று (பிப். 1) தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், பொதிகை மலை உள்ளிட்ட இடங்களில் ட்ரெக்கிங் மேற்கொள்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். கலாசார செழுமையை விளக்கும் வகையில் கலாசார மையம் உருவாக்கப்படும்.

பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் தமிழகத்துக்கு வெளியாகின. இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். அதிலும் குறிப்பாக, பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என தி.மு.க. எம்.பி.,க்கள் முழக்கமிட்டனர். புதிய ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும் மத்திய பட்ஜெட்டில் ஒரு தொலைநோக்கு திட்டம் கூட இல்லை எனக்கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். இதனை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்த உடன் அவை இன்று காலை 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து