முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்

வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

1 ஒன்றியமும், மாநிலமும் அதிகார போட்டியாளர்களாக இல்லாமல், நிர்வாகத்தில் பங்காளர்களாக செயல்படுவது கூட்டாட்சி சமநிலையை பாதுகாக்க உதவும்.

2 பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது.

3 புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதாவை அறிமுகம் செய்ய, பாதிக்கப்படும் மாநில சட்டமன்றங்களில் ஒப்புதலை பெற வேண்டும்.

4 ஒரே நாடு - ஒரே மொழியை இந்தியா கைவிட வேண்டும்.

5 மும்மொழித் திட்டம் தோல்வி என்பதை உணர்ந்து இருமொழி திட்டத்திற்கு மாற வேண்டும்.

6 மாநில சட்டமன்றம் பரிந்துரைக்கும் 3 பெயரில் ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

7 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டிற்கான எண்ணிக்கை முடக்கத்தை 2126 வரை நீட்டிக்க அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்.

8 சுயாட்சி உடைய மாநில தேர்தல் ஆணையங்கள், சட்டமன்ற தேர்தல்கள் & உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும்.

9 கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.

10 மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட சுகாதாரத்துறையில் மத்திய அரசு தலையிடுவது தவிர்க்க வேண்டும்.

 

11 தன்னாட்சி பெற்ற சுதந்திரமான நியாயமான சரக்கு மற்றும் சேவை வரி அவயத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து